Archive for 01/11/2011 - 01/12/2011

அன்புக்குரியவளே

நாம்
கூடும்
ஒவ்வொரு வேளையிலும்
ஒன்றும் ஒன்றும்
இரண்டென்பது
தப்பாமல்
தவறுகிறதே.

17 November 2011
Posted by Unknown

போராட்டம்

கோடானகோடி
விந்தணுக்களோடு
முட்டி மோதி
போராடி வென்றதால்தான்
நீயும்; நானும்
ஆக
போராட்டம்
வாழ்க்கைக்கு
புதிதான ஒன்றல்ல
வழிகளும்
வடிவங்களும்
மாறலாமே
இலட்சியம் மாறாது
எதுவுமற்று ஏதிலிகளாய்
நடு வீதிகளில்-நாம்
நித்திரையிலும் நீட்டுகிறார்கள்
அடக்குமுறை ஆயுதத்தை
மரணித்து வீழ்ந்தாலும்
மண்டியிடாது வாழடா.
15 November 2011
Posted by Unknown

அவள்

ரோஜா செடியிலுள்ள
முள்
நீ கொண்ட கோபத்தை
நியாயப்படுத்தியது.
by சயூட்............
14 November 2011
Posted by Unknown

வெற்றி

தோல்விகள்
பலவற்றின்
கூட்டுப்பிரசவம்
by சயூட்.
Posted by Unknown

பெண்ணே..............

உன்னைப்பற்றி
எழுதவரும் போதெல்லாம்
ஆற்றல் அடங்கிப்போகிறது
மொழியோ தோற்றோடி விடுகிறது.
by sajud
Posted by Unknown

அவளும் டாக்டர்தான்

அவளும்
டாக்டர்தான்
வெட்டலோ,கீறலோ
இன்றியும்
இரத்தமோ,வலியோ
வராமலும்
இதயமாற்று சிகிச்சை
செய்த
சாதனைப்பெண்.
by சயூட்.................
Posted by Unknown

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -