- Back to Home »
- Softwares , கணனித் தொழில்நுட்பம் »
- உங்கள் கணனியில் தமிழில் ரைப் செய்ய மிகச்சிறந்த மென்பொருள்.
Posted by : Unknown
05 December 2012
நாங்கள் கணனியில் தமிழ்மொழியில் சொற்களை தட்டச்சு செய்ய பலரும் பலவிதமான மென்பொருட்களை உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் நாம் அனைவரும் அதாவது கணனிக்கு புதியவர்கள் உட்பட, இலகுவாக தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவென்றே இருக்கிறது ''E-Kalappai''
என்ற அருமையான இந்த இலவச மென்பொருள்.
ஆனால் நாம் அனைவரும் அதாவது கணனிக்கு புதியவர்கள் உட்பட, இலகுவாக தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவென்றே இருக்கிறது ''E-Kalappai''
என்ற அருமையான இந்த இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களை இலகுவாக பெறலாம்.இதுவே இதன் இலகுத்தன்மையும் சிறப்புமாகும்.
உயிரெழுத்துக்கள்: அ (a), ஆ (aa or A), இ (i), ஈ (ii or I), உ(u), ஊ (uu or U), எ(e), ஏ (ee or E), ஐ (ai), ஒ (o), ஓ (oo or O), ஔ (au)
ஆய்த எழுத்து: ஃ(f)
மெய்யெழுத்துக்கள்: க் (k of h), ங் (ng), ச் (s or ch), ஞ் (nj), ட் (t or d), ண் (N), த்(th), ந் (w), ப் (p or b), ம் (m), ய் (y), ர் (r), ல் (l), வ் (v), ழ் (z), ள் (L), ற் (R), ன் (n)

கிரந்த எழுத்துக்கள்: ஜ் (j), ஸ் (S), ஷ் (sh), ஹ் (h), க்ஷ் (ksh), ஸ்ரீ (Sri)
உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை ரைப் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக,
க(ka) = க்(k) + அ(a)
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa)
உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை ரைப் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக,
க(ka) = க்(k) + அ(a)
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa)
குறிப்பு= ஆங்கில பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்களின் தமிழ் வடிவத்தை பெற shift உடன் குறித்த எழுத்தை சேர்த்து அழுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக'ண்'என்ற எழுத்தைப்பெற shift + n ஆகியவற்றை அழுத்த வேண்டும்.
F2 விசையை அழுத்துவதன் மூலம் விரும்பிய விசைப்பலகைக்கு(ஆங்கிலம்-தமிழ்) மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலம் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.