- Back to Home »
- கணனித் தொழில்நுட்பம் »
- பாஸ்வேர்ட்(Password) பாதுகாப்பு?
Posted by : Unknown
18 December 2012
பொதுவாக நம்மிடையே பலர் ''பாஸ்வேர்ட்(Password)'' பாதுகாப்பு பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு மின்னஞ்சலையோ, இணையக்கணக்கையோ ஆரம்பிக்கும்போது ஏதோ நமக்கு ஞாபகம் நிற்கக்கூடிய ஒரு சொல்லை அதாவது பெயர், அப்பா பெயர், ஊர், வயது அல்லது பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் இல்லாவிடில் 123456, abcdef போன்றவற்றில் ஏதாவதொன்றை பாஸ்வேர்ட்டாக கொடுத்து விடுகிறோம்.
இவற்றை இலகுவில் ஞாபகப்படுத்தக்கூடியதாக இருக்குமென்பது உங்களது எண்ணம். ஆனால் பாஸ்வேர்ட்டை பறிக்க நினைப்பவர்களுக்கும் உங்களைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்த ஒருவருக்கும் இதுபோன்ற பாஸ்வேர்ட்களை இலகுவில் உய்த்தறிய முடியுமல்லவா?
எனவே பெயர்களைக்கொண்டு பாஸ்வேர்ட் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். அதேபோல அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல.
இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன. அம்மென்பொருட்களில் இதுபோன்ற பாஸ்வேர்ட் சேமித்து வைக்கும் கோப்பை சொடுக்கினால் போதும் உடனே உங்கள் பாஸ்வேர்ட்டை கண்டுபிடித்துவிடும்.
எனவே பாஸ்வேர்ட் விடயத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும்போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள். பல இடங்களில் ஆறு (6) இலக்கமே போதும் எனச்சொல்வார்கள். ஆனால் நீங்கள் நீளமான பாஸ்வேர்ட்டை அமைத்துக் கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் இடும் கட்டம் தாண்டியும் நீளமான பாஸ்வேர்ட்டை அமைத்துக் கொள்ளலாம். இது மிகவும் ஆரோக்கியமானதொரு பாஸ்வேர்ட் முறையாக அமையலாம். நீண்ட சொற்களை குறுகிய நேரத்திற்குள் ஞாபகப்படுத்திக்கொள்வது பலருக்கும் சிரமமாக இருப்பதனால், நீண்ட பாஸ்வேர்டை இலகுவில் கையகப்படுத்த முடியாது.
அத்துடன் ஸ்பைவேர்(Spyware), மால்வேர்(Malware) போன்ற வைரஸ்கள் நமது கணனியிலிருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் நமது பாஸ்வேர்ட்டும் அனுப்பப்படுவதற்கான வாய்ப்புண்டு.
இவ்வாறேதேனும் இருக்கலாமென நினைத்தால் Task Managerஇனை திறந்து பாருங்கள். உங்களுக்கு தெரியாத ஏதேனுமொரு உளவறி மென்பொருள் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
இவ் உளவறி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்கின்ற விடயங்களை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது, சேதம் விளைவிப்பது என்பது ஒருசிலரால் மட்டும்தான் முடியும். ஏதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய்சொல்லக்கூடும். அதற்கு Hacking மற்றும் Cracking போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும். அவ்வாறனவர்கள் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல அன்ரிவைரஸ்(Antivirus) மென்பொருட்களை நிறுவிக்கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஜீமெயில், யாகூ மற்றும் ஹொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை(Auto login) தவிர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லொக்கவுட்(Log out) செய்து வெளியேறுங்கள்.
அடுத்ததாக நாம் பாஸ்வேர்ட் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கு இடையிடையே குறியீடுகள்(Symbols) : ; . * @ $ # ^ % = / & போன்றவைகளையும் எழுத்துக்களை கொடுக்கும்போது இடைக்கிடையே பெரிய எழுத்துக்களும், சிறிய எழுத்துக்களும் (Capital & Small Letters) மாறி மாறிக் கொடுத்து கடினமான கடவுச்சொல்லாக தேர்வுசெய்வது மிக மிகப்பாதுகாப்பானதாகும்.
Source- Computer Today