- Back to Home »
- Uncategorized »
- தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.
Posted by : Unknown
11 November 2012
ஆங்கில அறிவு சிறிதேனும் இல்லாதவன் பேசத்தெரிந்தும் ஊமையாவான். இன்றைய வியாபார உலகத்தில் ஆங்கிலஅறிவின் அவசியம் மிகவும் இன்றியமையாதது.
ஆகவே ஆங்கிலத்தை கற்க விரும்புவோருக்கு பயன்படக்கூடிய ஒருசில தளங்களைப் பார்க்கலாம்.
உங்களுடைய ஆங்கில அறிவு எந்த மட்டத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை, நீங்கள் இத்தளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலஅறிவு மட்டத்தை அதிகரிக்கலாம்.
ஆகவே ஆங்கிலத்தை கற்க விரும்புவோருக்கு பயன்படக்கூடிய ஒருசில தளங்களைப் பார்க்கலாம்.
உங்களுடைய ஆங்கில அறிவு எந்த மட்டத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை, நீங்கள் இத்தளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலஅறிவு மட்டத்தை அதிகரிக்கலாம்.
Aangilam
இந்த தளம் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஆரம்ப ஆங்கில அறிவுடன் உள்ள ஒருவர் இத்தளத்திலுள்ள பாடங்களை சரிவரக் கற்பாராயின் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்தினுள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி மட்டத்தை அடையலாம்.
இங்கே ஆங்கில இலக்கணம், பேச்சு ஆங்கிலம் (Spoken English) ,ஆங்கில துணுக்குகள் என பல்வேறுபட்ட வகைகளில் பாடப்பரப்புக்கள் காணப்படுகின்றன.
மேலும் இத்தளத்தில் பாடங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.
ஹொங் ஹொங்கைச் சேர்ந்த H.K. அருண் என்னும் தனி ஒருவரால் நடாத்தப்படும் இத்தளம் நான் கண்ணுற்ற தளங்களிலே தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போருக்கு முதல் தரமான,சிறப்பான தளமாகும்.தன்னலமற்ற சேவையினை வழங்கி வரும் அருண் அண்ணாவுக்கு இவ்விடத்தில் பாராட்டுக்கள்.
Tamildiction
இத்தளத்தில் குறிப்பிட்ட ஒரு வினைச்சொல்லினையோ அல்லது ஏதேனும் ஒரு சொல்லினையோ குறித்து தேடினால் அது தொடர்பான 12 காலங்களில் அமைந்த வசனங்களையும், ஏனைய அல்லது குறித்த சொல் தொடர்பான வாக்கியங்களையும் பல உதாரணங்களோடு படிக்க முடியும்.
இதில் உள்ள Tenses Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.
அடுத்து Principal Part of Verbs கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.
அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
''English to everyone, everywhere, everytime.......thats our prime'' என்ற சிந்தனையோடு இயங்கிவரும் Tamil Diction குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
மேலும் சில பயனுள்ள தளங்கள்.
2.Tamiltospokenenglish - இத்தளத்தில் குறித்த ஒரு சொல்லை இட்டு தேடினால் அதன் ஒலிவடிவம், சொல்விளக்கம், அச்சொல் தொடர்பான வாக்கியங்கள் என அசத்தலாகவே எமக்கு பலவற்றை அறியத்தருகின்றது.
வாழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இத்தளங்கள் மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே இதை படிப்பதோடு மட்டும் நில்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.