Posted by : Unknown
01 November 2012
You Tube தளத்தில் நாம் பார்க்கும் சில வகையான வீடியோக்களில் எங்களுக்கு அதன் MP3 வடிவம் மட்டும் கிடைத்தாலே போதுமானதாக இருக்கும். ஆனால் தரவிறக்க நினைத்தால் ஒலி வடிவத்தை மட்டும் தனியே தரவிறக்க முடியுமா என்ன...
சரி கவலையை விடுங்க,
You Tube தளத்தில் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் ஒலி வடிவம் (MP3) மட்டுமே வேண்டுமென்று நினைத்தால், உங்களுக்காகவே உதவ தயாராக இருக்கிறது==>>> www.listentoyoutube.com
இத்தளத்திற்கு சென்று அங்குள்ள பெட்டியில், நீங்கள் தரவிறக்க உள்ள You Tube வீடியோவின் மேலே உள்ள Address bar இல் காணப்படும் URL ஐ copy செய்து paste செய்யவும்.
இப்போது Go என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் சிறிது நேரத்தில் தரவிறக்குவதற்கான இணைப்பு தரப்படும் அதில் CLICK செய்வதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த வீடியோவின் MP3 வடிவத்தை தரவிறக்கிக் கொள்ளலாம். வேணும்னா முன்னோட்டம் கூட பார்க்கலாம்.
இதைப் போலவே இன்னுமொரு தளமும் உண்டு. www.vidtomp3.com இதில் உள்ள கூடுதல் சிறப்பு You Tube மட்டுமல்ல ஏனைய பலதளங்களிலுள்ள வீடியோக்களின் MP3களை கூட தரவிறக்கலாம்.