Showing posts with label Softwares. Show all posts

அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) தமிழில் செய்முறைகளும் விளக்கங்களும்.

கணினி வரைகலைத்துறையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு மென்பொருள் Adobe Photoshop ஆகும். இந்த மென்பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு 1987இல்  Thomas Knoll, John என்ற இரு சகோதர மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் பத்திற்கும் மேற்பட்ட பதிப்பு மாற்றங்களை கண்டு இன்று Adobe Photoshop CS6 ஆக அதி நவீன வடிவத்தை பெற்றுள்ளது.




இந்த அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) மென்பொருள் பற்றிய போதிய அனுபவம் இல்லாதவர்களுக்கும், இந்த மென்பொருளுக்கு புதியவர்களுக்குமாகவே இருக்கிறது ''கான் அண்ணாவின்'' அருமையான வலைத்தளம்.


இந்த வலைத்தளத்தில் போட்டோசாப் மென்பொருள் பற்றிய பூரண விளக்கங்கள் அத்தோடு அவற்றின் செய்முறை விளக்கங்களுமென நிறையவே உள்ளன.

இந்த வலைத்தளத்திலுள்ள போட்டோசாப் பாடங்களை படிப்பதன் மூலம் நீங்களும் கணினி வரைகலைத்துறையில் போதிய அறிவைப் பெறமுடியும்.



இணையத்தளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்




உங்கள் கணனியில் தமிழில் ரைப் செய்ய மிகச்சிறந்த மென்பொருள்.

நாங்கள் கணனியில் தமிழ்மொழியில் சொற்களை தட்டச்சு செய்ய பலரும் பலவிதமான மென்பொருட்களை உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் நாம் அனைவரும் அதாவது கணனிக்கு புதியவர்கள் உட்பட, இலகுவாக தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவென்றே இருக்கிறது ''E-Kalappai''
என்ற அருமையான இந்த இலவச மென்பொருள்.



இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களை இலகுவாக பெறலாம்.இதுவே இதன் இலகுத்தன்மையும் சிறப்புமாகும்.




உயிரெழுத்துக்கள்: அ (a), ஆ (aa or A), இ (i), ஈ (ii or I), உ(u), ஊ (uu or U), எ(e), ஏ (ee or E), ஐ (ai), ஒ (o), ஓ (oo or O), ஔ (au)

ஆய்த எழுத்து: ஃ(f)

மெய்யெழுத்துக்கள்: க் (k of h), ங் (ng), ச் (s or ch), ஞ் (nj), ட் (t or d), ண் (N), த்(th), ந் (w), ப் (p or b), ம் (m), ய் (y), ர் (r), ல் (l), வ் (v), ழ் (z), ள் (L), ற் (R), ன் (n)


கிரந்த எழுத்துக்கள்: ஜ் (j), ஸ் (S), ஷ் (sh), ஹ் (h), க்ஷ் (ksh), ஸ்ரீ (Sri)

உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை ரைப் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக,
க(ka) = க்(k) + அ(a)
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa)

குறிப்பு= ஆங்கில பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்களின் தமிழ் வடிவத்தை பெற shift உடன் குறித்த எழுத்தை சேர்த்து அழுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக'ண்'என்ற எழுத்தைப்பெற shift + n ஆகியவற்றை அழுத்த வேண்டும்.


F2 விசையை அழுத்துவதன் மூலம் விரும்பிய விசைப்பலகைக்கு(ஆங்கிலம்-தமிழ்) மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலம் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.

E-Kalappai மென்பொருளினை தரவிறக்கம் செய்ய click here

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -