Showing posts with label Uncategorized. Show all posts

தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.

ஆங்கில அறிவு சிறிதேனும் இல்லாதவன் பேசத்தெரிந்தும் ஊமையாவான். இன்றைய வியாபார உலகத்தில் ஆங்கிலஅறிவின் அவசியம் மிகவும் இன்றியமையாதது.

ஆகவே ஆங்கிலத்தை கற்க விரும்புவோருக்கு பயன்படக்கூடிய ஒருசில தளங்களைப் பார்க்கலாம்.

உங்களுடைய ஆங்கில அறிவு எந்த மட்டத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை,  நீங்கள் இத்தளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலஅறிவு மட்டத்தை அதிகரிக்கலாம்.

Aangilam


இந்த தளம் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஆரம்ப ஆங்கில அறிவுடன் உள்ள ஒருவர் இத்தளத்திலுள்ள பாடங்களை சரிவரக் கற்பாராயின் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்தினுள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி மட்டத்தை அடையலாம்.

இங்கே ஆங்கில இலக்கணம், பேச்சு ஆங்கிலம் (Spoken English) ,ஆங்கில துணுக்குகள் என பல்வேறுபட்ட வகைகளில் பாடப்பரப்புக்கள் காணப்படுகின்றன. 

மேலும் இத்தளத்தில் பாடங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.


ஹொங் ஹொங்கைச்  சேர்ந்த H.K. அருண் என்னும் தனி ஒருவரால் நடாத்தப்படும் இத்தளம் நான் கண்ணுற்ற தளங்களிலே தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போருக்கு முதல் தரமான,சிறப்பான தளமாகும்.தன்னலமற்ற சேவையினை வழங்கி வரும் அருண் அண்ணாவுக்கு இவ்விடத்தில் பாராட்டுக்கள்.


Tamildiction



இத்தளத்தில் குறிப்பிட்ட ஒரு வினைச்சொல்லினையோ அல்லது ஏதேனும் ஒரு சொல்லினையோ குறித்து தேடினால் அது தொடர்பான 12 காலங்களில் அமைந்த வசனங்களையும், ஏனைய அல்லது குறித்த சொல் தொடர்பான வாக்கியங்களையும் பல உதாரணங்களோடு படிக்க முடியும்.

இதில் உள்ள Tenses Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.

அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.

அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

''English to everyone, everywhere, everytime.......thats our prime'' என்ற சிந்தனையோடு இயங்கிவரும் Tamil Diction குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.



மேலும் சில பயனுள்ள தளங்கள்.


2.Tamiltospokenenglish - இத்தளத்தில் குறித்த ஒரு சொல்லை இட்டு தேடினால் அதன் ஒலிவடிவம், சொல்விளக்கம், அச்சொல் தொடர்பான வாக்கியங்கள் என அசத்தலாகவே எமக்கு பலவற்றை அறியத்தருகின்றது.

வாழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இத்தளங்கள் மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

நண்பர்களே இதை படிப்பதோடு மட்டும் நில்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


11 November 2012
Posted by Unknown

துடுப்பாட்ட வகைகளும் களத்தடுப்பு வியூகங்களும். - Types of Cricket Shorts and Fielding Positions

நீண்ட நாட்களாக விளையாட்டு சம்பந்தமான ஏதேனும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்ற ஆசை அதுதான் இந்தப்பதிவு.

கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் போது விரும்பியோ விரும்பாமலோ வர்ணனையையும் கேட்கதானே வேண்டும். நாமதான் அதை  கண்டுக்கிறதே இல்லையே.
சரி அதை விடுங்க,

நாம இப்ப துடுப்பாட்ட வகைகளின் பெயர்களை முதலில் பார்க்கலாம்.

உத்தியோக பூர்வமான அதாவது வழக்கமான துடுப்பாட்ட முறைகள் - (Orthodox Cricket shots)





1.UPPER CUT       
2.STRAIGHT DRIVE
3.LEG GLANCE
4.SQUARE DRIVE
5.COVER DRIVE
6.HOOK SHOT
7.PULL
8.SQUARE CUT
9.LATE CUT
10.SWEEP SHOT
11.REVERSE SWEEP





                        





இவற்றை விட  மேலும் சில துடுப்பாட்ட முறைகள்  இருந்தாலும் அவை வழக்கமான துடுப்பாட்ட முறைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.
இவற்றை விட சில குறிப்பிட்ட வீரர்களிற்கென்றே தனித்துவமான துடுப்பாட்ட முறைகளும் உண்டு. குறிப்பாக  டில்சானின் Scoop shot,   டோனியின் Helicopter shot   என்பன அதிகம் பிரபலமானவை.






ஆடுகள அளவுப்பிரமாணங்கள் - Pitch Dimensions






களத்தடுப்பு வியூகங்கள் - Fielding positions


உதாரணமாக வலதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவருக்காக அமைக்கப்படும் களத்தடுப்பு வியூகங்கள்.- (Fielding positions for a right Handed batsman)


இனிமேல் கிரிக்கெட் வர்ணனையில கொஞ்சமாவது விளங்கிடுமில்ல. ம்ம்
09 November 2012
Posted by Unknown

தமிழ் திரைப்படங்களை இணையத்தில் இலவசமாக காண்பதற்கு.(Watch Tamil Movies For Free)

தமிழ் திரைப்படங்களை இணையத்தில் பார்ப்பதற்கு பல்வேறு தளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. எனினும் இவற்றில் பல தளங்கள் சிறப்பான சேவையினை வழங்குகின்றனவா? என்று கேட்டால் அதற்கு பதில், இல்லை.

ஏனெனில் இலவச சேவை வழங்கு தளங்கள் என விளம்பரப்படுத்துவார்கள், High Definition தரத்திலான வீடியோக்கள் ,உறுப்பினர் ஆக வேண்டிய தொல்லை எதுவும் இல்லை என்றெல்லாம் பலவாறாக உல்டா விடுவார்கள். ஆனால்அங்கு ஒரு முறை சென்று பார்த்தால்தான் உண்மை தெரியும்.                                

இத்தகைய தளங்களில் பெரும்பாலானவை திருப்தியான சேவையினை வழங்குவதில்லை.

இவ்வாறான தளங்களிலிருந்து மாறுபட்டதுதான் 'TAMILIMAX' என்ற இணையத்தளம். இதில் உள்ள சிறப்புக்கள் என்னவென்றால்


1.உங்களுக்கான பயனர் கணக்கினை உருவாக்கி கொள்ளலாம் (விரும்பினால்).
2.உங்கள் வீடியோக்களை UPLOAD செய்து கொள்ளும் வசதி.
3.High Definition(H.D) தரத்திலான வீடியோக்கள்.
4.இத்தளத்தில் வீடியோக்கள்  Buffering ஆகும் தன்மை கூட மிகவும் குறைவே.
5.இங்கு திரைப்படங்கள் மட்டுமல்ல சினிமா நடிகை, நடிகர்களின் புகைப்படங்கள், சினிமா சம்மந்தமான விழாக்களின் வீடியோ பதிவுகள் போன்ற பலவற்றையும் காணமுடியும்.
6.மொத்தத்தில் இதை தமிழ் திரைப்படங்களுகான You Tube என சொல்லலாம், ஏனெனில் இதன் இடைமுகம் (Interface) You Tube இன் இடைமுகத்தை ஒத்தே காணப்படுவதோடு You Tube இல் காணப்படும் வசதிகள் போல இதுவும் பலவற்றை கொண்டுள்ளது.


இதை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன். நீங்களும் ஒருமுறை சென்று பார்த்துவிட்டு சொல்லுங்கள். புத்தம் புதிய திரைப்படங்களை H.D தரத்தில் பார்த்து மகிழுங்கள்.

தளத்திற்கு செல்ல. Click Here

don't argue....


do not ever argue
with your friends
if you fails-
you lost a friend
if you win-
you get a enemy.
01 June 2012
Posted by Unknown

Labels

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -