Archive for 01/12/2012 - 01/01/2013

பாஸ்வேர்ட்(Password) பாதுகாப்பு?

பொதுவாக நம்மிடையே பலர் ''பாஸ்வேர்ட்(Password)'' பாதுகாப்பு பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு மின்னஞ்சலையோ, இணையக்கணக்கையோ  ஆரம்பிக்கும்போது ஏதோ நமக்கு ஞாபகம் நிற்கக்கூடிய ஒரு சொல்லை அதாவது பெயர், அப்பா பெயர், ஊர், வயது அல்லது பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் இல்லாவிடில் 123456, abcdef  போன்றவற்றில் ஏதாவதொன்றை பாஸ்வேர்ட்டாக கொடுத்து விடுகிறோம்.




இவற்றை இலகுவில் ஞாபகப்படுத்தக்கூடியதாக இருக்குமென்பது உங்களது எண்ணம். ஆனால் பாஸ்வேர்ட்டை பறிக்க நினைப்பவர்களுக்கும் உங்களைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்த ஒருவருக்கும் இதுபோன்ற பாஸ்வேர்ட்களை இலகுவில் உய்த்தறிய முடியுமல்லவா?

எனவே பெயர்களைக்கொண்டு பாஸ்வேர்ட் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். அதேபோல அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல.
இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன. அம்மென்பொருட்களில் இதுபோன்ற பாஸ்வேர்ட் சேமித்து வைக்கும் கோப்பை சொடுக்கினால் போதும் உடனே உங்கள் பாஸ்வேர்ட்டை கண்டுபிடித்துவிடும்.

எனவே பாஸ்வேர்ட் விடயத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும்போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள். பல இடங்களில் ஆறு (6) இலக்கமே போதும் எனச்சொல்வார்கள். ஆனால் நீங்கள் நீளமான பாஸ்வேர்ட்டை அமைத்துக் கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் இடும் கட்டம் தாண்டியும் நீளமான பாஸ்வேர்ட்டை அமைத்துக் கொள்ளலாம். இது மிகவும் ஆரோக்கியமானதொரு பாஸ்வேர்ட் முறையாக அமையலாம். நீண்ட சொற்களை குறுகிய நேரத்திற்குள் ஞாபகப்படுத்திக்கொள்வது பலருக்கும் சிரமமாக இருப்பதனால், நீண்ட பாஸ்வேர்டை இலகுவில் கையகப்படுத்த முடியாது.
அத்துடன் ஸ்பைவேர்(Spyware), மால்வேர்(Malware) போன்ற வைரஸ்கள் நமது கணனியிலிருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் நமது பாஸ்வேர்ட்டும் அனுப்பப்படுவதற்கான வாய்ப்புண்டு.


இவ்வாறேதேனும் இருக்கலாமென நினைத்தால் Task Managerஇனை திறந்து பாருங்கள். உங்களுக்கு தெரியாத ஏதேனுமொரு உளவறி மென்பொருள் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ் உளவறி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்கின்ற விடயங்களை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது, சேதம் விளைவிப்பது என்பது ஒருசிலரால் மட்டும்தான் முடியும். ஏதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய்சொல்லக்கூடும். அதற்கு Hacking மற்றும் Cracking போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும். அவ்வாறனவர்கள் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல அன்ரிவைரஸ்(Antivirus) மென்பொருட்களை நிறுவிக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை ஜீமெயில், யாகூ மற்றும் ஹொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை(Auto login) தவிர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும்  பாஸ்வேர்ட் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லொக்கவுட்(Log out) செய்து வெளியேறுங்கள்.




அடுத்ததாக நாம் பாஸ்வேர்ட் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கு இடையிடையே குறியீடுகள்(Symbols) : ; . * @ $ # ^ % = / & போன்றவைகளையும் எழுத்துக்களை கொடுக்கும்போது இடைக்கிடையே பெரிய எழுத்துக்களும், சிறிய எழுத்துக்களும் (Capital & Small Letters) மாறி மாறிக் கொடுத்து கடினமான கடவுச்சொல்லாக தேர்வுசெய்வது மிக மிகப்பாதுகாப்பானதாகும்.

Source- Computer Today
18 December 2012
Posted by Unknown

மிகச்சிறந்த இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் 5 - (Top 5 Free Video Editing Software)

கணினிபாவனையில் இன்று அனேகருக்கு தேவைப்படும் மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கும்(Video Editing Software) முக்கிய இடமுண்டு.



அந்தவகையில் இன்று இணையத்தில் கிடைக்கும் மிகச்சிறந்த 5 Free Video Editing மென்பொருட்களின் தரவிறக்க இணைப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இவற்றில் நீங்கள் விரும்பியதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.


1. Avidemux - Click Here to Download

2. MovieStorm - Click Here to Download

3. Wax - Click Here to Download

4. Pinnacle Video Spin - Click Here to Download



5. Jahshaka - Click Here to Download


இவற்றுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு வீடியோ எடிட்டிங் மென்பொருட்களின் தரவிறக்க இணைப்பையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

  Avid Free DV Click Here to Download
 
VirtualDubClick Here to Download

அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) தமிழில் செய்முறைகளும் விளக்கங்களும்.

கணினி வரைகலைத்துறையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு மென்பொருள் Adobe Photoshop ஆகும். இந்த மென்பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு 1987இல்  Thomas Knoll, John என்ற இரு சகோதர மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் பத்திற்கும் மேற்பட்ட பதிப்பு மாற்றங்களை கண்டு இன்று Adobe Photoshop CS6 ஆக அதி நவீன வடிவத்தை பெற்றுள்ளது.




இந்த அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) மென்பொருள் பற்றிய போதிய அனுபவம் இல்லாதவர்களுக்கும், இந்த மென்பொருளுக்கு புதியவர்களுக்குமாகவே இருக்கிறது ''கான் அண்ணாவின்'' அருமையான வலைத்தளம்.


இந்த வலைத்தளத்தில் போட்டோசாப் மென்பொருள் பற்றிய பூரண விளக்கங்கள் அத்தோடு அவற்றின் செய்முறை விளக்கங்களுமென நிறையவே உள்ளன.

இந்த வலைத்தளத்திலுள்ள போட்டோசாப் பாடங்களை படிப்பதன் மூலம் நீங்களும் கணினி வரைகலைத்துறையில் போதிய அறிவைப் பெறமுடியும்.



இணையத்தளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்




2012ஆம் ஆண்டின் மிகமோசமான கடவுச்சொற்கள். Top 25 Most Popular (Worst) Passwords of 2012

எங்களில் பலர் ''பாஸ்வேர்ட்'' பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. ஒரு இணைய கணக்கையோ (Facebook, Twitter) , மின்னஞ்சல் கணக்கையோ ஆரம்பிக்கும் போது இலகுவில் நமக்கு ஞாபகம் நிற்கக்கூடியவாறாக கடவுச்சொல்லை கொடுப்போம்.
அதாவது பெயர், பிறந்ததிகதி, தொலைபேசி இல, 123456, abcdef  போன்றவற்றில் ஏதாவதொன்றை பலரும் கடவுச்சொல்லாக பயன்படுத்துவர்.

இவ்வாறு இலகுவில் உய்த்தறியக்கூடிய,அல்லது பொதுவான வழக்கிலுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்தினால் உங்களுடைய இணையக் கணக்கின் பாதுகாப்பிற்கு யாராலும் உத்தரவாதம் வழங்க முடியாது.



Splash data இணையத்தளம் இந்த ஆண்டின் மிக மோசமான 25 கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரம் கீழே



Top 25 Worst Passwords


01.  password 
02.  123456 
03.  12345678 
04.  abc123 
05.  qwerty 
06.  monkey 
07.  letmein 
08.  dragon 
09.  111111 
10.  baseball 
11.  iloveyou 
12.  trustno1 
13.  1234567 
14.  sunshine 
15.  master 
16.  123123 
17.  welcome 
18.  shadow 
19.  ashley 
20.  football 
21.  jesus 
22.  michael 
23.  ninja 
24.  mustang 
25.  password1 



நண்பர்களே மேலே உள்ள பட்டியலில் உள்ளமாதிரியான பாஸ்வேர்ட்களில் ஒன்றையோ அல்லது அதேமாதிரி ஒத்த பாஸ்வேர்ட்களையோ நீங்கள் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிட்டு பாதுகாப்பான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.
             
16 December 2012
Posted by Unknown

உங்கள் கணனியில் தமிழில் ரைப் செய்ய மிகச்சிறந்த மென்பொருள்.

நாங்கள் கணனியில் தமிழ்மொழியில் சொற்களை தட்டச்சு செய்ய பலரும் பலவிதமான மென்பொருட்களை உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் நாம் அனைவரும் அதாவது கணனிக்கு புதியவர்கள் உட்பட, இலகுவாக தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவென்றே இருக்கிறது ''E-Kalappai''
என்ற அருமையான இந்த இலவச மென்பொருள்.



இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களை இலகுவாக பெறலாம்.இதுவே இதன் இலகுத்தன்மையும் சிறப்புமாகும்.




உயிரெழுத்துக்கள்: அ (a), ஆ (aa or A), இ (i), ஈ (ii or I), உ(u), ஊ (uu or U), எ(e), ஏ (ee or E), ஐ (ai), ஒ (o), ஓ (oo or O), ஔ (au)

ஆய்த எழுத்து:(f)

மெய்யெழுத்துக்கள்: க் (k of h), ங் (ng), ச் (s or ch), ஞ் (nj), ட் (t or d), ண் (N), த்(th), ந் (w), ப் (p or b), ம் (m), ய் (y), ர் (r), ல் (l), வ் (v), ழ் (z), ள் (L), ற் (R), ன் (n)


கிரந்த எழுத்துக்கள்: ஜ் (j), ஸ் (S), ஷ் (sh), ஹ் (h), க்ஷ் (ksh), ஸ்ரீ (Sri)

உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை ரைப் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக,
(ka) = க்(k) + அ(a)
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa)

குறிப்புஆங்கில பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்களின் தமிழ் வடிவத்தை பெற shift உடன் குறித்த எழுத்தை சேர்த்து அழுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக'ண்'என்ற எழுத்தைப்பெற shift + n ஆகியவற்றை அழுத்த வேண்டும்.


F2 விசையை அழுத்துவதன் மூலம் விரும்பிய விசைப்பலகைக்கு(ஆங்கிலம்-தமிழ்) மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலம் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.

E-Kalappai மென்பொருளினை தரவிறக்கம் செய்ய click here

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -