Archive for 01/11/2012 - 01/12/2012

தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.

ஆங்கில அறிவு சிறிதேனும் இல்லாதவன் பேசத்தெரிந்தும் ஊமையாவான். இன்றைய வியாபார உலகத்தில் ஆங்கிலஅறிவின் அவசியம் மிகவும் இன்றியமையாதது.

ஆகவே ஆங்கிலத்தை கற்க விரும்புவோருக்கு பயன்படக்கூடிய ஒருசில தளங்களைப் பார்க்கலாம்.

உங்களுடைய ஆங்கில அறிவு எந்த மட்டத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை,  நீங்கள் இத்தளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலஅறிவு மட்டத்தை அதிகரிக்கலாம்.

Aangilam


இந்த தளம் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஆரம்ப ஆங்கில அறிவுடன் உள்ள ஒருவர் இத்தளத்திலுள்ள பாடங்களை சரிவரக் கற்பாராயின் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்தினுள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி மட்டத்தை அடையலாம்.

இங்கே ஆங்கில இலக்கணம், பேச்சு ஆங்கிலம் (Spoken English) ,ஆங்கில துணுக்குகள் என பல்வேறுபட்ட வகைகளில் பாடப்பரப்புக்கள் காணப்படுகின்றன. 

மேலும் இத்தளத்தில் பாடங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.


ஹொங் ஹொங்கைச்  சேர்ந்த H.K. அருண் என்னும் தனி ஒருவரால் நடாத்தப்படும் இத்தளம் நான் கண்ணுற்ற தளங்களிலே தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போருக்கு முதல் தரமான,சிறப்பான தளமாகும்.தன்னலமற்ற சேவையினை வழங்கி வரும் அருண் அண்ணாவுக்கு இவ்விடத்தில் பாராட்டுக்கள்.


Tamildiction



இத்தளத்தில் குறிப்பிட்ட ஒரு வினைச்சொல்லினையோ அல்லது ஏதேனும் ஒரு சொல்லினையோ குறித்து தேடினால் அது தொடர்பான 12 காலங்களில் அமைந்த வசனங்களையும், ஏனைய அல்லது குறித்த சொல் தொடர்பான வாக்கியங்களையும் பல உதாரணங்களோடு படிக்க முடியும்.

இதில் உள்ள Tenses Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.

அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.

அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

''English to everyone, everywhere, everytime.......thats our prime'' என்ற சிந்தனையோடு இயங்கிவரும் Tamil Diction குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.



மேலும் சில பயனுள்ள தளங்கள்.


2.Tamiltospokenenglish - இத்தளத்தில் குறித்த ஒரு சொல்லை இட்டு தேடினால் அதன் ஒலிவடிவம், சொல்விளக்கம், அச்சொல் தொடர்பான வாக்கியங்கள் என அசத்தலாகவே எமக்கு பலவற்றை அறியத்தருகின்றது.

வாழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இத்தளங்கள் மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

நண்பர்களே இதை படிப்பதோடு மட்டும் நில்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


11 November 2012
Posted by Unknown

துடுப்பாட்ட வகைகளும் களத்தடுப்பு வியூகங்களும். - Types of Cricket Shorts and Fielding Positions

நீண்ட நாட்களாக விளையாட்டு சம்பந்தமான ஏதேனும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்ற ஆசை அதுதான் இந்தப்பதிவு.

கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் போது விரும்பியோ விரும்பாமலோ வர்ணனையையும் கேட்கதானே வேண்டும். நாமதான் அதை  கண்டுக்கிறதே இல்லையே.
சரி அதை விடுங்க,

நாம இப்ப துடுப்பாட்ட வகைகளின் பெயர்களை முதலில் பார்க்கலாம்.

உத்தியோக பூர்வமான அதாவது வழக்கமான துடுப்பாட்ட முறைகள் - (Orthodox Cricket shots)





1.UPPER CUT       
2.STRAIGHT DRIVE
3.LEG GLANCE
4.SQUARE DRIVE
5.COVER DRIVE
6.HOOK SHOT
7.PULL
8.SQUARE CUT
9.LATE CUT
10.SWEEP SHOT
11.REVERSE SWEEP





                        





இவற்றை விட  மேலும் சில துடுப்பாட்ட முறைகள்  இருந்தாலும் அவை வழக்கமான துடுப்பாட்ட முறைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.
இவற்றை விட சில குறிப்பிட்ட வீரர்களிற்கென்றே தனித்துவமான துடுப்பாட்ட முறைகளும் உண்டு. குறிப்பாக  டில்சானின் Scoop shot,   டோனியின் Helicopter shot   என்பன அதிகம் பிரபலமானவை.






ஆடுகள அளவுப்பிரமாணங்கள் - Pitch Dimensions






களத்தடுப்பு வியூகங்கள் - Fielding positions


உதாரணமாக வலதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவருக்காக அமைக்கப்படும் களத்தடுப்பு வியூகங்கள்.- (Fielding positions for a right Handed batsman)


இனிமேல் கிரிக்கெட் வர்ணனையில கொஞ்சமாவது விளங்கிடுமில்ல. ம்ம்
09 November 2012
Posted by Unknown

அசத்தல் பேஸ்புக் Text Art வடிவங்கள் - Awesome Facebook Text Art (ascii text).

உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அசத்தலான Text Art வடிவங்களை பகிர ஆசையா, 



கீழே இருப்பவற்றைப் போல, இவை வெறும் சாம்பிள் தான் இப்படி அசத்தலான பல Text Art வடிவங்களை பெற்றுக் கொள்ளவே இருக்கிறது.
FSymbols-Text-Art  என்கின்ற தளம்.


இந்த தளத்தில் பல்வேறு வகையான Text Art வடிவங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனித முகங்கள், அசத்தலான குறியீடுகள், மிருகங்கள், பூக்கள்,காதல் சின்னங்கள் என பல வகைகளில் Text Art வடிவங்கள் நிறைந்துள்ளன.



இங்கே சென்று நீங்கள் விரும்பிய  Text Art வடிவத்தை COPY செய்து  உங்கள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பொக்ஸில் PASTE செய்யுங்கள். அப்பிடியே Post பண்ணிடுங்க. அவ்வளவுதான்.......






…..____________________ , ,__
……/ `—___________—-_____] – - – - – - – - ░ ▒▓▓█D
…../_==o;;;;;;;;_______.:/
…..), —.(_(__) /
….// (..) ), —-”
…//___//
..//___//
.//___//


_________oBBBBB8o___oBBBBBBB8, 
_____o8BBBBBBBBBBB__BBBBBBBBB8________o88o, 
___o8BBBBBB**8BBBB__BBBBBBBBBB_____oBBBBBBBo, 
__oBBBBBBB*___***___BBBBBBBBBB_____BBBBBBBBBBo, 
_8BBBBBBBBBBooooo___*BBBBBBB8______*BB*_8BBBBBBo, 
_8BBBBBBBBBBBBBBBB8ooBBBBBBB8___________8BBBBBBB8, 
__*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8_o88BB88BBBBBBBBBBBB, 
____*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8, 
______**8BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB*, 
___________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8*, 
____________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBB8888**, 
_____________BBBBBBBBBBBBBBBBBBBBBBB*, 
_____________*BBBBBBBBBBBBBBBBBBBBB*, 
______________*BBBBBBBBBBBBBBBBBB8, 
_______________*BBBBBBBBBBBBBBBB*, 
________________8BBBBBBBBBBBBBBB8, 






அப்பிடியே உங்கள் நீங்கள் விரும்பும் பெயர்,வசனங்கள் என்பவற்றை Text Art வடிவமாக்கி பெற்றுக் கொள்ள இந்தப் பக்கங்களுக்கு செல்லுங்க...

fsymbols.com/generators

fsymbols.com/generators2


இந்தமாதிரி உங்களுக்கு தேவையான வசனங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

04 November 2012
Posted by Unknown

பேஸ்புக் ஸ்டேட்டஸ் ட்ரிக் - Trick to Update Your facebook status in blue colour.

facebook கணக்கு வைத்திருக்காதவர்களை இன்று காண்பதென்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு facebook பாவனை நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.


சரி தலைப்புக்குள்ள வருவம், நாம் எம் எண்ணங்களை அல்லது வேறு பிடித்த ஏதாவது ஒன்றை facebookஇல் statusஆக போடுவோம்.

இந்த facebook statusஇனை சிறிது வித்தியாசமாக போட்டுத்தான் பார்ப்போமே, அதாவது சாதாரணமாக நாம் போடும் status கறுப்பு நிறத்தில் தான் காணப்படும். 
ஆனால் சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் போடுவது எப்படியென்று பார்க்கலாம்.


STEP 1 - கீழே உள்ள கோடிங்கை copy செய்து உங்கள் facebook status box இல் paste செய்யுங்கள். 

@[1: ]@@[1:[0:1: write your status here ]]


STEP 2- பின்னர் சிவப்பு நிறத்தில் காணப்படும் வசனத்தை அழித்து விட்டு அங்கு உங்கள்  status இனை எழுதுங்கள்.

STEP 3-அவ்வளவு தான் இப்போது நீங்கள் உங்கள்  status இனை Post செய்யலாம்.


பட விளக்கம்- 







" ENJOY AND WAIT FOR THE NEXT "


சரி சின்னதா இன்னும் ஒரு ட்ரிக், facebookஇல் blank status எப்படி போடுறதனும் பார்க்கலாம்.
கீழே உள்ள கோடிங்கை copy செய்து status box இல் paste செய்திட்டு post பண்ணுங்க.

@[0:0: ]

அவ்வளவுதான்....You have done, your blank status has been updated.
இனி  blank status போட்டு நண்பர்களை கொஞ்சம் வெறுப்பேத்துங்க.



03 November 2012
Posted by Unknown

You Tube வீடியோக்களிலிருந்து mp3 வடிவத்தை மட்டும் தரவிறக்கம் செய்ய.

You Tube தளத்தில் நாம் பார்க்கும் சில வகையான வீடியோக்களில் எங்களுக்கு அதன் MP3 வடிவம் மட்டும் கிடைத்தாலே போதுமானதாக இருக்கும். ஆனால் தரவிறக்க நினைத்தால் ஒலி வடிவத்தை மட்டும் தனியே தரவிறக்க முடியுமா என்ன...
சரி கவலையை விடுங்க,

You Tube தளத்தில் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் ஒலி வடிவம் (MP3) மட்டுமே வேண்டுமென்று நினைத்தால், உங்களுக்காகவே உதவ தயாராக இருக்கிறது==>>> www.listentoyoutube.com



இத்தளத்திற்கு சென்று அங்குள்ள பெட்டியில், நீங்கள் தரவிறக்க உள்ள You Tube வீடியோவின் மேலே உள்ள Address bar  இல் காணப்படும் URLcopy செய்து paste செய்யவும்.
இப்போது Go என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் சிறிது நேரத்தில்  தரவிறக்குவதற்கான இணைப்பு தரப்படும் அதில் CLICK செய்வதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த வீடியோவின் MP3 வடிவத்தை தரவிறக்கிக் கொள்ளலாம். வேணும்னா முன்னோட்டம் கூட பார்க்கலாம்.

  

இதைப் போலவே இன்னுமொரு தளமும் உண்டு.  www.vidtomp3.com               இதில் உள்ள கூடுதல் சிறப்பு  You Tube மட்டுமல்ல ஏனைய பலதளங்களிலுள்ள வீடியோக்களின் MP3களை கூட தரவிறக்கலாம். 


01 November 2012
Posted by Unknown

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -