Archive for 2012

பாஸ்வேர்ட்(Password) பாதுகாப்பு?

பொதுவாக நம்மிடையே பலர் ''பாஸ்வேர்ட்(Password)'' பாதுகாப்பு பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒரு மின்னஞ்சலையோ, இணையக்கணக்கையோ  ஆரம்பிக்கும்போது ஏதோ நமக்கு ஞாபகம் நிற்கக்கூடிய ஒரு சொல்லை அதாவது பெயர், அப்பா பெயர், ஊர், வயது அல்லது பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம் இல்லாவிடில் 123456, abcdef  போன்றவற்றில் ஏதாவதொன்றை பாஸ்வேர்ட்டாக கொடுத்து விடுகிறோம்.




இவற்றை இலகுவில் ஞாபகப்படுத்தக்கூடியதாக இருக்குமென்பது உங்களது எண்ணம். ஆனால் பாஸ்வேர்ட்டை பறிக்க நினைப்பவர்களுக்கும் உங்களைப்பற்றிய முழுவிபரமும் தெரிந்த ஒருவருக்கும் இதுபோன்ற பாஸ்வேர்ட்களை இலகுவில் உய்த்தறிய முடியுமல்லவா?

எனவே பெயர்களைக்கொண்டு பாஸ்வேர்ட் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். அதேபோல அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல.
இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன. அம்மென்பொருட்களில் இதுபோன்ற பாஸ்வேர்ட் சேமித்து வைக்கும் கோப்பை சொடுக்கினால் போதும் உடனே உங்கள் பாஸ்வேர்ட்டை கண்டுபிடித்துவிடும்.

எனவே பாஸ்வேர்ட் விடயத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட்டை தட்டச்சு செய்யும்போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள். பல இடங்களில் ஆறு (6) இலக்கமே போதும் எனச்சொல்வார்கள். ஆனால் நீங்கள் நீளமான பாஸ்வேர்ட்டை அமைத்துக் கொள்ளுங்கள். பாஸ்வேர்ட் இடும் கட்டம் தாண்டியும் நீளமான பாஸ்வேர்ட்டை அமைத்துக் கொள்ளலாம். இது மிகவும் ஆரோக்கியமானதொரு பாஸ்வேர்ட் முறையாக அமையலாம். நீண்ட சொற்களை குறுகிய நேரத்திற்குள் ஞாபகப்படுத்திக்கொள்வது பலருக்கும் சிரமமாக இருப்பதனால், நீண்ட பாஸ்வேர்டை இலகுவில் கையகப்படுத்த முடியாது.
அத்துடன் ஸ்பைவேர்(Spyware), மால்வேர்(Malware) போன்ற வைரஸ்கள் நமது கணனியிலிருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச்சந்தர்ப்பத்தில் நமது பாஸ்வேர்ட்டும் அனுப்பப்படுவதற்கான வாய்ப்புண்டு.


இவ்வாறேதேனும் இருக்கலாமென நினைத்தால் Task Managerஇனை திறந்து பாருங்கள். உங்களுக்கு தெரியாத ஏதேனுமொரு உளவறி மென்பொருள் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இவ் உளவறி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்கின்ற விடயங்களை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது, சேதம் விளைவிப்பது என்பது ஒருசிலரால் மட்டும்தான் முடியும். ஏதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய்சொல்லக்கூடும். அதற்கு Hacking மற்றும் Cracking போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும். அவ்வாறனவர்கள் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல அன்ரிவைரஸ்(Antivirus) மென்பொருட்களை நிறுவிக்கொள்ள வேண்டும்.

முடிந்தவரை ஜீமெயில், யாகூ மற்றும் ஹொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை(Auto login) தவிர்த்துக்கொள்ளுங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும்  பாஸ்வேர்ட் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லொக்கவுட்(Log out) செய்து வெளியேறுங்கள்.




அடுத்ததாக நாம் பாஸ்வேர்ட் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துக்களுக்கு இடையிடையே குறியீடுகள்(Symbols) : ; . * @ $ # ^ % = / & போன்றவைகளையும் எழுத்துக்களை கொடுக்கும்போது இடைக்கிடையே பெரிய எழுத்துக்களும், சிறிய எழுத்துக்களும் (Capital & Small Letters) மாறி மாறிக் கொடுத்து கடினமான கடவுச்சொல்லாக தேர்வுசெய்வது மிக மிகப்பாதுகாப்பானதாகும்.

Source- Computer Today
18 December 2012
Posted by Unknown

மிகச்சிறந்த இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் 5 - (Top 5 Free Video Editing Software)

கணினிபாவனையில் இன்று அனேகருக்கு தேவைப்படும் மென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கும்(Video Editing Software) முக்கிய இடமுண்டு.



அந்தவகையில் இன்று இணையத்தில் கிடைக்கும் மிகச்சிறந்த 5 Free Video Editing மென்பொருட்களின் தரவிறக்க இணைப்புக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இவற்றில் நீங்கள் விரும்பியதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பாருங்கள்.


1. Avidemux - Click Here to Download

2. MovieStorm - Click Here to Download

3. Wax - Click Here to Download

4. Pinnacle Video Spin - Click Here to Download



5. Jahshaka - Click Here to Download


இவற்றுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு வீடியோ எடிட்டிங் மென்பொருட்களின் தரவிறக்க இணைப்பையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

  Avid Free DV Click Here to Download
 
VirtualDubClick Here to Download

அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) தமிழில் செய்முறைகளும் விளக்கங்களும்.

கணினி வரைகலைத்துறையில் இன்றியமையாத இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு மென்பொருள் Adobe Photoshop ஆகும். இந்த மென்பொருளின் அடிப்படைக் கட்டமைப்பு 1987இல்  Thomas Knoll, John என்ற இரு சகோதர மென்பொருள் வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் பத்திற்கும் மேற்பட்ட பதிப்பு மாற்றங்களை கண்டு இன்று Adobe Photoshop CS6 ஆக அதி நவீன வடிவத்தை பெற்றுள்ளது.




இந்த அடோப் போட்டோசாப்(Adobe Photoshop) மென்பொருள் பற்றிய போதிய அனுபவம் இல்லாதவர்களுக்கும், இந்த மென்பொருளுக்கு புதியவர்களுக்குமாகவே இருக்கிறது ''கான் அண்ணாவின்'' அருமையான வலைத்தளம்.


இந்த வலைத்தளத்தில் போட்டோசாப் மென்பொருள் பற்றிய பூரண விளக்கங்கள் அத்தோடு அவற்றின் செய்முறை விளக்கங்களுமென நிறையவே உள்ளன.

இந்த வலைத்தளத்திலுள்ள போட்டோசாப் பாடங்களை படிப்பதன் மூலம் நீங்களும் கணினி வரைகலைத்துறையில் போதிய அறிவைப் பெறமுடியும்.



இணையத்தளத்திற்கு செல்ல இங்கே அழுத்தவும்




2012ஆம் ஆண்டின் மிகமோசமான கடவுச்சொற்கள். Top 25 Most Popular (Worst) Passwords of 2012

எங்களில் பலர் ''பாஸ்வேர்ட்'' பற்றி பெரிதாக யோசிப்பதில்லை. ஒரு இணைய கணக்கையோ (Facebook, Twitter) , மின்னஞ்சல் கணக்கையோ ஆரம்பிக்கும் போது இலகுவில் நமக்கு ஞாபகம் நிற்கக்கூடியவாறாக கடவுச்சொல்லை கொடுப்போம்.
அதாவது பெயர், பிறந்ததிகதி, தொலைபேசி இல, 123456, abcdef  போன்றவற்றில் ஏதாவதொன்றை பலரும் கடவுச்சொல்லாக பயன்படுத்துவர்.

இவ்வாறு இலகுவில் உய்த்தறியக்கூடிய,அல்லது பொதுவான வழக்கிலுள்ள கடவுச்சொற்களை பயன்படுத்தினால் உங்களுடைய இணையக் கணக்கின் பாதுகாப்பிற்கு யாராலும் உத்தரவாதம் வழங்க முடியாது.



Splash data இணையத்தளம் இந்த ஆண்டின் மிக மோசமான 25 கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றின் விபரம் கீழே



Top 25 Worst Passwords


01.  password 
02.  123456 
03.  12345678 
04.  abc123 
05.  qwerty 
06.  monkey 
07.  letmein 
08.  dragon 
09.  111111 
10.  baseball 
11.  iloveyou 
12.  trustno1 
13.  1234567 
14.  sunshine 
15.  master 
16.  123123 
17.  welcome 
18.  shadow 
19.  ashley 
20.  football 
21.  jesus 
22.  michael 
23.  ninja 
24.  mustang 
25.  password1 



நண்பர்களே மேலே உள்ள பட்டியலில் உள்ளமாதிரியான பாஸ்வேர்ட்களில் ஒன்றையோ அல்லது அதேமாதிரி ஒத்த பாஸ்வேர்ட்களையோ நீங்கள் பயன்படுத்தினால் உடனடியாக மாற்றிவிட்டு பாதுகாப்பான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.
             
16 December 2012
Posted by Unknown

உங்கள் கணனியில் தமிழில் ரைப் செய்ய மிகச்சிறந்த மென்பொருள்.

நாங்கள் கணனியில் தமிழ்மொழியில் சொற்களை தட்டச்சு செய்ய பலரும் பலவிதமான மென்பொருட்களை உபயோகப்படுத்துகிறோம்.
ஆனால் நாம் அனைவரும் அதாவது கணனிக்கு புதியவர்கள் உட்பட, இலகுவாக தமிழ் மொழியில் தட்டச்சு செய்யவென்றே இருக்கிறது ''E-Kalappai''
என்ற அருமையான இந்த இலவச மென்பொருள்.



இந்த மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களை இலகுவாக பெறலாம்.இதுவே இதன் இலகுத்தன்மையும் சிறப்புமாகும்.




உயிரெழுத்துக்கள்: அ (a), ஆ (aa or A), இ (i), ஈ (ii or I), உ(u), ஊ (uu or U), எ(e), ஏ (ee or E), ஐ (ai), ஒ (o), ஓ (oo or O), ஔ (au)

ஆய்த எழுத்து:(f)

மெய்யெழுத்துக்கள்: க் (k of h), ங் (ng), ச் (s or ch), ஞ் (nj), ட் (t or d), ண் (N), த்(th), ந் (w), ப் (p or b), ம் (m), ய் (y), ர் (r), ல் (l), வ் (v), ழ் (z), ள் (L), ற் (R), ன் (n)


கிரந்த எழுத்துக்கள்: ஜ் (j), ஸ் (S), ஷ் (sh), ஹ் (h), க்ஷ் (ksh), ஸ்ரீ (Sri)

உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை ரைப் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக,
(ka) = க்(k) + அ(a)
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa)

குறிப்புஆங்கில பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்களின் தமிழ் வடிவத்தை பெற shift உடன் குறித்த எழுத்தை சேர்த்து அழுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக'ண்'என்ற எழுத்தைப்பெற shift + n ஆகியவற்றை அழுத்த வேண்டும்.


F2 விசையை அழுத்துவதன் மூலம் விரும்பிய விசைப்பலகைக்கு(ஆங்கிலம்-தமிழ்) மாற்றிக்கொள்ள முடியும்.
இந்த மென்பொருள் மூலம் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.

E-Kalappai மென்பொருளினை தரவிறக்கம் செய்ய click here

தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க அசத்தலான தளங்கள்.

ஆங்கில அறிவு சிறிதேனும் இல்லாதவன் பேசத்தெரிந்தும் ஊமையாவான். இன்றைய வியாபார உலகத்தில் ஆங்கிலஅறிவின் அவசியம் மிகவும் இன்றியமையாதது.

ஆகவே ஆங்கிலத்தை கற்க விரும்புவோருக்கு பயன்படக்கூடிய ஒருசில தளங்களைப் பார்க்கலாம்.

உங்களுடைய ஆங்கில அறிவு எந்த மட்டத்தில் இருந்தாலும் பிரச்சனையில்லை,  நீங்கள் இத்தளங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் ஆங்கிலஅறிவு மட்டத்தை அதிகரிக்கலாம்.

Aangilam


இந்த தளம் தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. ஆரம்ப ஆங்கில அறிவுடன் உள்ள ஒருவர் இத்தளத்திலுள்ள பாடங்களை சரிவரக் கற்பாராயின் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்தினுள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி மட்டத்தை அடையலாம்.

இங்கே ஆங்கில இலக்கணம், பேச்சு ஆங்கிலம் (Spoken English) ,ஆங்கில துணுக்குகள் என பல்வேறுபட்ட வகைகளில் பாடப்பரப்புக்கள் காணப்படுகின்றன. 

மேலும் இத்தளத்தில் பாடங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.


ஹொங் ஹொங்கைச்  சேர்ந்த H.K. அருண் என்னும் தனி ஒருவரால் நடாத்தப்படும் இத்தளம் நான் கண்ணுற்ற தளங்களிலே தமிழ் மூலம் ஆங்கிலம் கற்போருக்கு முதல் தரமான,சிறப்பான தளமாகும்.தன்னலமற்ற சேவையினை வழங்கி வரும் அருண் அண்ணாவுக்கு இவ்விடத்தில் பாராட்டுக்கள்.


Tamildiction



இத்தளத்தில் குறிப்பிட்ட ஒரு வினைச்சொல்லினையோ அல்லது ஏதேனும் ஒரு சொல்லினையோ குறித்து தேடினால் அது தொடர்பான 12 காலங்களில் அமைந்த வசனங்களையும், ஏனைய அல்லது குறித்த சொல் தொடர்பான வாக்கியங்களையும் பல உதாரணங்களோடு படிக்க முடியும்.

இதில் உள்ள Tenses Dictionary கிளிக் செய்து Verb -ஐ தட்டச்சு செய்யவும். உங்களுக்கு உங்களுடைய Verb ஆனது Simple Tense, Continuous Tense,Perfect Tense.Perfect Continuous Tense என 12 மில்லியன் வார்த்தைகள் தொகுத்துள்ளார்கள்.

அடுத்து Principal Part of Verbs  கிளிக் செய்ய verb வகைகளை பட்டியலிட்டுள்ளார்கள்.

அடுத்துள்ள Simple Sentences கிளிக் செய்ய சுமார் 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு தமிழ் ஆங்கில விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

''English to everyone, everywhere, everytime.......thats our prime'' என்ற சிந்தனையோடு இயங்கிவரும் Tamil Diction குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.



மேலும் சில பயனுள்ள தளங்கள்.


2.Tamiltospokenenglish - இத்தளத்தில் குறித்த ஒரு சொல்லை இட்டு தேடினால் அதன் ஒலிவடிவம், சொல்விளக்கம், அச்சொல் தொடர்பான வாக்கியங்கள் என அசத்தலாகவே எமக்கு பலவற்றை அறியத்தருகின்றது.

வாழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழ் மூலம் ஆங்கிலம் கற்க விரும்பும் அனைவருக்கும் இத்தளங்கள் மிகவும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 

நண்பர்களே இதை படிப்பதோடு மட்டும் நில்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


11 November 2012
Posted by Unknown

துடுப்பாட்ட வகைகளும் களத்தடுப்பு வியூகங்களும். - Types of Cricket Shorts and Fielding Positions

நீண்ட நாட்களாக விளையாட்டு சம்பந்தமான ஏதேனும் ஒரு பதிவு எழுத வேண்டுமென்ற ஆசை அதுதான் இந்தப்பதிவு.

கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் போது விரும்பியோ விரும்பாமலோ வர்ணனையையும் கேட்கதானே வேண்டும். நாமதான் அதை  கண்டுக்கிறதே இல்லையே.
சரி அதை விடுங்க,

நாம இப்ப துடுப்பாட்ட வகைகளின் பெயர்களை முதலில் பார்க்கலாம்.

உத்தியோக பூர்வமான அதாவது வழக்கமான துடுப்பாட்ட முறைகள் - (Orthodox Cricket shots)





1.UPPER CUT       
2.STRAIGHT DRIVE
3.LEG GLANCE
4.SQUARE DRIVE
5.COVER DRIVE
6.HOOK SHOT
7.PULL
8.SQUARE CUT
9.LATE CUT
10.SWEEP SHOT
11.REVERSE SWEEP





                        





இவற்றை விட  மேலும் சில துடுப்பாட்ட முறைகள்  இருந்தாலும் அவை வழக்கமான துடுப்பாட்ட முறைகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை.
இவற்றை விட சில குறிப்பிட்ட வீரர்களிற்கென்றே தனித்துவமான துடுப்பாட்ட முறைகளும் உண்டு. குறிப்பாக  டில்சானின் Scoop shot,   டோனியின் Helicopter shot   என்பன அதிகம் பிரபலமானவை.






ஆடுகள அளவுப்பிரமாணங்கள் - Pitch Dimensions






களத்தடுப்பு வியூகங்கள் - Fielding positions


உதாரணமாக வலதுகை துடுப்பாட்ட வீரர் ஒருவருக்காக அமைக்கப்படும் களத்தடுப்பு வியூகங்கள்.- (Fielding positions for a right Handed batsman)


இனிமேல் கிரிக்கெட் வர்ணனையில கொஞ்சமாவது விளங்கிடுமில்ல. ம்ம்
09 November 2012
Posted by Unknown

அசத்தல் பேஸ்புக் Text Art வடிவங்கள் - Awesome Facebook Text Art (ascii text).

உங்கள் பேஸ்புக் பக்கத்தில் அசத்தலான Text Art வடிவங்களை பகிர ஆசையா, 



கீழே இருப்பவற்றைப் போல, இவை வெறும் சாம்பிள் தான் இப்படி அசத்தலான பல Text Art வடிவங்களை பெற்றுக் கொள்ளவே இருக்கிறது.
FSymbols-Text-Art  என்கின்ற தளம்.


இந்த தளத்தில் பல்வேறு வகையான Text Art வடிவங்கள் நிறைந்து காணப்படுகின்றன. உதாரணமாக பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் மனித முகங்கள், அசத்தலான குறியீடுகள், மிருகங்கள், பூக்கள்,காதல் சின்னங்கள் என பல வகைகளில் Text Art வடிவங்கள் நிறைந்துள்ளன.



இங்கே சென்று நீங்கள் விரும்பிய  Text Art வடிவத்தை COPY செய்து  உங்கள் பேஸ்புக் ஸ்டேட்டஸ் பொக்ஸில் PASTE செய்யுங்கள். அப்பிடியே Post பண்ணிடுங்க. அவ்வளவுதான்.......






…..____________________ , ,__
……/ `—___________—-_____] – - – - – - – - ░ ▒▓▓█D
…../_==o;;;;;;;;_______.:/
…..), —.(_(__) /
….// (..) ), —-”
…//___//
..//___//
.//___//


_________oBBBBB8o___oBBBBBBB8, 
_____o8BBBBBBBBBBB__BBBBBBBBB8________o88o, 
___o8BBBBBB**8BBBB__BBBBBBBBBB_____oBBBBBBBo, 
__oBBBBBBB*___***___BBBBBBBBBB_____BBBBBBBBBBo, 
_8BBBBBBBBBBooooo___*BBBBBBB8______*BB*_8BBBBBBo, 
_8BBBBBBBBBBBBBBBB8ooBBBBBBB8___________8BBBBBBB8, 
__*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8_o88BB88BBBBBBBBBBBB, 
____*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8, 
______**8BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB*, 
___________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB8*, 
____________*BBBBBBBBBBBBBBBBBBBBBBBB8888**, 
_____________BBBBBBBBBBBBBBBBBBBBBBB*, 
_____________*BBBBBBBBBBBBBBBBBBBBB*, 
______________*BBBBBBBBBBBBBBBBBB8, 
_______________*BBBBBBBBBBBBBBBB*, 
________________8BBBBBBBBBBBBBBB8, 






அப்பிடியே உங்கள் நீங்கள் விரும்பும் பெயர்,வசனங்கள் என்பவற்றை Text Art வடிவமாக்கி பெற்றுக் கொள்ள இந்தப் பக்கங்களுக்கு செல்லுங்க...

fsymbols.com/generators

fsymbols.com/generators2


இந்தமாதிரி உங்களுக்கு தேவையான வசனங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

04 November 2012
Posted by Unknown

பேஸ்புக் ஸ்டேட்டஸ் ட்ரிக் - Trick to Update Your facebook status in blue colour.

facebook கணக்கு வைத்திருக்காதவர்களை இன்று காண்பதென்பது அரிதாகிவிட்டது. அந்தளவுக்கு facebook பாவனை நம்மவர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது.


சரி தலைப்புக்குள்ள வருவம், நாம் எம் எண்ணங்களை அல்லது வேறு பிடித்த ஏதாவது ஒன்றை facebookஇல் statusஆக போடுவோம்.

இந்த facebook statusஇனை சிறிது வித்தியாசமாக போட்டுத்தான் பார்ப்போமே, அதாவது சாதாரணமாக நாம் போடும் status கறுப்பு நிறத்தில் தான் காணப்படும். 
ஆனால் சற்று வித்தியாசமாக நீல நிறத்தில் போடுவது எப்படியென்று பார்க்கலாம்.


STEP 1 - கீழே உள்ள கோடிங்கை copy செய்து உங்கள் facebook status box இல் paste செய்யுங்கள். 

@[1: ]@@[1:[0:1: write your status here ]]


STEP 2- பின்னர் சிவப்பு நிறத்தில் காணப்படும் வசனத்தை அழித்து விட்டு அங்கு உங்கள்  status இனை எழுதுங்கள்.

STEP 3-அவ்வளவு தான் இப்போது நீங்கள் உங்கள்  status இனை Post செய்யலாம்.


பட விளக்கம்- 







" ENJOY AND WAIT FOR THE NEXT "


சரி சின்னதா இன்னும் ஒரு ட்ரிக், facebookஇல் blank status எப்படி போடுறதனும் பார்க்கலாம்.
கீழே உள்ள கோடிங்கை copy செய்து status box இல் paste செய்திட்டு post பண்ணுங்க.

@[0:0: ]

அவ்வளவுதான்....You have done, your blank status has been updated.
இனி  blank status போட்டு நண்பர்களை கொஞ்சம் வெறுப்பேத்துங்க.



03 November 2012
Posted by Unknown

You Tube வீடியோக்களிலிருந்து mp3 வடிவத்தை மட்டும் தரவிறக்கம் செய்ய.

You Tube தளத்தில் நாம் பார்க்கும் சில வகையான வீடியோக்களில் எங்களுக்கு அதன் MP3 வடிவம் மட்டும் கிடைத்தாலே போதுமானதாக இருக்கும். ஆனால் தரவிறக்க நினைத்தால் ஒலி வடிவத்தை மட்டும் தனியே தரவிறக்க முடியுமா என்ன...
சரி கவலையை விடுங்க,

You Tube தளத்தில் நீங்கள் தரவிறக்க விரும்பும் வீடியோவின் ஒலி வடிவம் (MP3) மட்டுமே வேண்டுமென்று நினைத்தால், உங்களுக்காகவே உதவ தயாராக இருக்கிறது==>>> www.listentoyoutube.com



இத்தளத்திற்கு சென்று அங்குள்ள பெட்டியில், நீங்கள் தரவிறக்க உள்ள You Tube வீடியோவின் மேலே உள்ள Address bar  இல் காணப்படும் URLcopy செய்து paste செய்யவும்.
இப்போது Go என்பதை அழுத்தவும். அவ்வளவுதான் சிறிது நேரத்தில்  தரவிறக்குவதற்கான இணைப்பு தரப்படும் அதில் CLICK செய்வதன் மூலம் நீங்கள் தெரிவு செய்த வீடியோவின் MP3 வடிவத்தை தரவிறக்கிக் கொள்ளலாம். வேணும்னா முன்னோட்டம் கூட பார்க்கலாம்.

  

இதைப் போலவே இன்னுமொரு தளமும் உண்டு.  www.vidtomp3.com               இதில் உள்ள கூடுதல் சிறப்பு  You Tube மட்டுமல்ல ஏனைய பலதளங்களிலுள்ள வீடியோக்களின் MP3களை கூட தரவிறக்கலாம். 


01 November 2012
Posted by Unknown

Norton AntiVirus இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் - Norton Antivirus 2012 free Key For 6 Months Genuine License.

உலகின் தலைசிறந்த முதல் மூன்று  AntiVirus மென்பொருட்களில் Norton  AntiVirus உம் ஒன்றாகும்.




மென்பொருள் சந்தையில் பல்வேறு விலைகளில் இது கிடைத்தாலும் Norton நிறுவனம் இப்போது இந்த மென்பொருளின் முழுப்பதிபை 6 மாதங்களுக்கான இலவச கீயுடன் (free six-month license to full versions of Norton Antivirus 2012.) தருகிறது.


எப்படி இதனை பெறலாம்,
How To Get It:

 1.Visit Norton Promotion Web Page And Click Start Download Button  To Download Norton Download Manager Client.- விளக்கம்>>>
முதலில் இந்த பக்கத்திற்கு செல்லுங்கள் Norton Promotion Web Page பின்னர்     அங்குள்ள  Start Download Button ஐ அழுத்தி Norton Download Manager Client.இனை தரவிறக்கி கணனியில் நிறுவிக் கொள்ளவும்.
 2. Click Norton Download Manager Client To Let It Download.- விளக்கம்>>>
 Norton Download Manager Client ஐ உங்கள் கணனியில் நிறுவிய உடன் Norton AntiVirus   மென்பொருள் தரவிறக்கம் ஆரம்பமாகும்.



உங்கள் கணனியில்  Norton AntiVirus மென்பொருளை நிறுவிய பின் கீழே உள்ளதைப் பொல இம்மென்பொருள் காட்சியளிக்கும்.


26 October 2012
Posted by Unknown
Tag :

Facebook இலிருந்து Update Box (Ticker) வசதியை நீக்குவது எப்படி? - How To Remove The Update Box (Ticker).


Facebook இன் புதிய தோற்றமான Timeline வசதியோடு சேர்ந்து வந்ததுதான் இந்த Ticker வசதி. இது எமது நண்பர்களின் சில வகையான செயற்பாடுகளை எமது பக்கத்தின் சைட்பாரில் காட்டிக் கொண்டிருக்கும்.





இதன் மூலம் சில நன்மைகள் கிடைத்தாலும் சிலருக்கு இந்த வசதி பிடிக்கவில்லை. இந்த வசதி பிடிக்காத நண்பர்களுக்காகவே இந்த பதிவு. சரி நீங்கள் Facebook Ticker வசதியை நீக்க தயாரா?

அதற்கு முதலில் நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்துபவராக இருக்க வேண்டும்.


Facebook Ticker வசதியை நீக்கிவிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே,
Facebook news ticker Remover என்ற குரோம் நீட்சியை உங்கள் உலவியில் இணைக்க வேண்டியது மட்டுமே.


இந்த வசதியை உங்கள் குரோம் உலவியில் இணைக்க  இங்கே செல்க.





25 October 2012
Posted by Unknown

Twitter: தெரியவேண்டிய குறுக்கு விசைகள் - (Use Twitter With Keyboard Shortcuts)



சமூக வலைத்தளங்களில் Facebook இனை அடுத்து அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக Twitter காணப்படுகிறது. இதில் உள்ள சிறப்புக்கள் காரணமாக நம்மவர்களும் பலர் இப்போது இதை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
ஆனா ராஜன் லீக்ஸ் சின்மயி பிரச்சனை பற்றியெல்லாம் எனக்கு ஒன்னுமே தெரியாதப்பா. அப்புறம் ஏதோ சைபர் கிரைம்னு எல்லாம் ஏதோ சொல்லுராய்ங்க, நமக்கு எதுக்கு தேவையில்லாதது. நாம சொல்ல வந்த விடயத்திற்கு வருவோம்.

எனவே Twitter தளத்தை பயன்படுத்தும் நண்பர்களுக்காக, அதனை இலகுவில் பயன்படுத்த உதவும் கீபோர்ட் குறுக்கு விசைகள் (Keyboard Shortcuts) பற்றி இன்றைய பதிவில் பார்க்கலாம்.




Actions
F – Favorite
R- Reply
T- Retweet
M- Direct message
N – New Tweet
Enter- Open Tweet details
L- Close all open Tweets
Navigation
?- This menu
J- Next Tweet
K- Previous Tweet
Space- Page down

/- Search
.- Load new Tweets
Timelines
G H- Home
G C- Connect
G R- Mentions
G D- Discover
G P- Profile
G F- Favorites
G M- Messages
G U- Go to user

அனாமதேய ஈமெயில் அனுப்புவது எப்படி? How to send a Fake mail......

அனாமதேய ஈமெயில்கள் அனுப்புவதற்கு பல தளங்கள் இருக்கின்றன. எனினும் இவற்றில் பலவற்றில் நாம் அனுப்பும் அனாமதேய மெயில்களோடு சேர்ந்து, இது ஒரு போலியான மெயில் என்ற அறிவிப்பும், அந்த தளத்தின் இணைப்பும் கூடவே நம்மையறியாமல் சென்றுவிடும்.

ஆனால் இங்கே நாம் பார்க்கப்போகும் தளம் அத்தகைய தளங்களிலிருந்து மிகவும் மாறுபட்டதோடு, அனாமதேய ஈமெயில்களை அனுப்புவதற்கு சூப்பரானதுமான தளமாகும்.




இதில் பல சிறப்புகள் உள்ளன அவற்றில் முக்கியமான சில.........

1.நீங்கள் விரும்பிய பெயர், ஈமெயில் முகவரி என்பவற்றை பயன்படுத்தும் வாய்ப்பு.

2.செய்தியுடன் கூடவே கோப்புகளை அனுப்பும் (FILES Attachment) வசதி.

3.நீங்கள் அனுப்பும் ஈமெயில் போலியானது என்பதை காட்டும் எவ்வகையான அறிவிப்பையும் மெயிலைப் பெறுபவர் காண முடியாது.
அசல் ஒரிஜினல் மெயில் போலவே காணப்படும்,

4.இவற்றையெல்லாம் விட இன்னும் அருமையான வசதிகளைக் கொண்ட  Advanced Settings தெரிவு.

இத்தளத்தில் உள்ள சிறப்பான வசதிகளை முழுவதுமாக இங்கே சொல்ல முடியாது. ஒருமுறை சென்று தான் பாருங்களேன்..... FAKE MAILER


இத்தளத்தை பயன்படுத்தி நான் அனுப்பிய அனாமதேய மெயில் ஒன்று இங்கே உங்களின் பார்வைக்கு .......


* friends,
  don't use this to illegal activities.     


23 October 2012
Posted by Unknown

Blog Archive

Pages

www.theesham.blogspot.com. Powered by Blogger.

Translate

Ads 468x60px

Social Icons

Featured Posts

- Copyright © Theesham -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -